அரசஞ்சண்முகனார்


மகாவித்துவான்,பெரும்புலவர்,இலக்கணக்கடல்,இலக்கண வேந்தர்

அரசஞ்சண்முகனார்

15.09.1868 - 11.01.1915

அரசஞ்சண்முகனார், அரசப்பபிள்ளை - பார்வதி அம்மையாரின் அருமை மகனாக 1868 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள், மதுரையை அடுத்த சோழவந்தானில் பிறந்தார்.

.      அவர் தமது 18 ஆம் அகவையில் ‘மாலை மாற்று மாலை” என்ற நூலைப் பாடி முடித்தார்.

.  அவர் தமது 20 ஆம் அகவையில் “ சிதம்பர விநாயகர் மாலை “ என்னும் அரிய நூலை இயற்றி, அதனைத் தமது ஆசிரியர் முன் அரங்கேற்றம் செய்தார்.

.  1902 ஆம் ஆண்டில், மதுரை சேதுபதி உயர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகையில், அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாட அட்டவணையில் தமிழ்ப்பாட நேரத்தைக் குறைத்து ஆங்கிலப்பாட நேரத்தைக் கூட்டியதால் உள்ளம் கொதித்து, அன்றே தமது 12 ஆண்டுக்கால ஆசிரியர் பணியிலிருந்து விலகினார்.

.  அவர் எழுதிய நூல்கள் சில:
v   தொல்காப்பியப் பாயிர விருத்தி
v   திருக்குறளாராய்ச்சி
v   திருக்குறட் சண்முக விருத்தி
v   சோழவந்தான் சிதம்பர விநாயகர் மாலை
v   இன்னிசை இருநூறு
v   வள்ளுவர் நேரிசை
v   மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை
v   திருவள்ளுவர் நேரிசை
v   ஏகபாத நூற்றந்தாதி
v   முருகக் கடவுள் கலம்பகம்
v   நுண் பொருட் கோவை
v   மதுரைச் சிலேடை
v   நவமணிக் காரிகை நிகண்டு
v   பஞ்ச தந்திர வெண்பா

௬.  1915 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் தமது 47 ஆம் அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.