திருவள்ளுவர்


திருவள்ளுவர்


திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். அவர் கி.மு முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது. திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப் புலவர்பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப் பெயர்களால் அழைப்பர்.


திருவள்ளுவர்
, அனைத்து  தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்கன்னியாகுமரி கடல் முனையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவப்பட்டுள்ளது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்தப்படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 30 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

பதினெண்கீழ்க்கணக்கு
எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா  வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.. இது அடிப்படையில் ஓர் ஒப்பரிய வாழ்வியல் நூல்.. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இனமொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவுது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.