அ.ச. ஞானசம்பந்தன்.

 செந்தமிழ் வித்தகர்- அறிவுப் புதையல்
.. ஞானசம்பந்தன்.
10.11.1916 - 27.08.2002


அ.ச.ஞானசம்பந்தன் 10.11.1916 ல்  .மு.சரவண முதலியாருக்கும் சிவகாமி அம்மையாருக்கும்   மகனாகப் பிறந்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமது . பட்டப் படிப்புக்கு அ.ச. ஞானசம்பந்தன் எடுத்துக்கொண்ட பாடம் இயற்பியல். ..ஞா.வின் இலக்கணத் தெளிவும், இலக்கிய அறிவும், அவரது தமிழின் ஆளுமையும் அப்போது அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த நாவலர் சோமசுந்தர பாரதியாரை அசர வைத்தது.

.. ஞானசம்பந்தனின் பெற்றோரின் சம்மதத்துடன் இரண்டாண்டு இயற்பியல் படித்து முடித்திருந்த அவரைத், தமிழுக்கு மாறச் செய்து முதுகலைப் பட்டமும் பெற வைத்தார் நாவலர் சோமசுந்தர பாரதியார். 

அப்போது அங்கே ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த சீனிவாச சாஸ்திரியாரின் நெருக்கமும், அன்பும், ஆதரவும் ..ஞா.வின் ஆங்கிலப் புலமையைச் செழுமைப்படுத்தின. பிற்காலத்தில் பல மொழிபெயர்ப்புகளில் ..ஞா. ஈடுபடுவதற்கு அந்த ஆங்கிலப் புலமை கை கொடுத்தது.

1942
முதல் 1956 வரை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் "..ஞா." பணியாற்றிய காலத்தில் அவரது மாணாக்கர்கள் பலர் தமிழாராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற உதவினார்.

1956
முதல் 1961 வரை அகில இந்திய வானொலியில் பணியாற்றியபோது அதுவரை பண்டிதர்களால் மட்டுமே படிக்கப்பட்டு வந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப காவியம் போன்றவற்றை நாடக வடிவமாக்கித் தமிழ்நாட்டில் பாமரர்களும் அந்த இலக்கியச் செல்வங்களைச் சுவைக்க வழிவகுத்தார்.

மதுரை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு "தெ.பொ.மீ." துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டார். குருநாதர் தெ.பொ.மீ." அவர்களின்  கட்டளையை ஏற்று, .. ஞானசம்பந்தன் 1970 முதல் 1973 வரை மதுரைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராப் பதவி வகித்தார்.

சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் கம்பன் கழகம் போன்றவை அவரது தமிழார்வத்துக்கு வடிகாலாக அமைந்தன. "செந்தமிழ் வித்தகர்" .. ஞானசம்பந்தன் சங்க இலக்கியம் தொடங்கி, சைவ சிந்ததாந்தம் வரை ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தார்.


தனது 86 வயது வரை தமிழ்ப் பணி ஆற்றிய  அ. ச. ஞான சம்பந்தன் 27.08.2002 அன்று காலமானபோது தமிழ் அழுதது!