மு.வரதராசன்


பேராசிரியப் பெருந்தகை
மு.ரதராசன்

25-04-1912-10.10.1974

மு.ரதராசன்,வட ஆர்க்காடு மாவட்டம் வேலம் என்னும் சிறிய கிராமத்தில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு 25-04-1912ல் பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப் பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. 

1948
ல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.. 1939ல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.பின்னர் 1971ல் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார்.

நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள் நாடகங்கள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை போன்றவற்றை தமிழுக்குத் தந்துள்ளார். 
பெர்னாட்ஷா திரு.வி.. காந்தியடிகள் இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார்.
 
இவரது
திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டு பெருமை தேடிக்கொண்டுள்ளது.

"மு..எழுதிய நூல்களில் கி.பி.2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு..வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன.

புதினங்களில் பண்டைத் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதில் மு.. தனித்து நின்றார். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய்த் திகழ்ந்தார்.
மு..வின் "அகல் விளக்கு" எனும் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. "கள்ளோ காவியமோ" என்ற நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.

1944ம் ஆண்டு மு.. எழுதிய "செந்தாமரை" நாவலை வெளியிட யாரும் முன்வராததால், அந்நாவலை அவரே வெளியிட்டார். செந்தாமரை வெற்றிக்குப் பின் 20 ஆண்டு காலம் உழைத்து ஆண்டுக்கு இவ்வளவு நூல்கள் என எழுதி பேரும் புகழும் பெற்றார். இந்த இருபது ஆண்டு காலத்தை மு.. என்ற எழுத்தாளரின் "பொற்காலம்" என்றே சொல்லலாம்.

மு.ரதராசன் 10.10.1974ல் இறையடி சேர்ந்தார்.