இலட்சுமணன் 17.11.1909 ஆம் நாள் தமிழ்நாட்டில் திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், திருமிகு. மு சிங்காரவேலர்,- திருவாட்டி. அ. இரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு இரண்டாம் புதல்வராகப் பிறந்தார்.
இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை, இவரது தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார், "இலக்குவன்" என மாற்றச் செய்தார்.
மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தி 1963-இல் முனைவர் பட்டம் பெற்றார்.
1967-இல் சென்னை மாநிலக்கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராகப் பணியேற்ற அன்றைய கல்வியமைச்சரிடம் தமிழைப் பயிற்சிமொழியாக்குமாறும் ஆங்கிலத்துக்குச் சார்பாக நடக்கவேண்டாமெனவும் இவர் கூறியதால் இவரால் ஓராண்டுக்கு மேல் அப்பணியில் நீடிக்கமுடியவில்லை..
அ. கவிதைகள்
1. எழிலரசி (1933)
2. தமிழிசைப் பாடல்கள்
3. மாணவர் ஆற்றுப்படை
4. துரத்தப்பட்டேன்,
5. அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து
ஆ. கதைகள்
1. குறள் விளக்கக் கதை பொதிபாடல்
2. வானொலிக் கதைகள்
இ. ஆராய்ச்சி நூல்கள்
1. அம்மூவனார்
2. தொல்காப்பிய ஆராய்ச்சி
3. பழந்தமிழ்,
4. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்)
ஈ. விளக்கவுரைகள்
1. மாமூலனார் காதல் காட்சிகள் (சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்)
2. தொல்காப்பிய விளக்கம்
உ. வாழ்க்கை வரலாறு
1. கருமவீரர் காமராசர்,
ஊ. தன் வரலாறு
1. என் வாழ்க்கைப் போர் (இளமைப்பருவம்),
எ. திருக்குறள் விளக்க நூல்கள்
1. எல்லாரும் இந்நாட்டு மன்னர் - பகுதி 1,
2. எல்லாரும் இந்நாட்டு மன்னர் - பகுதி 2
3. அமைச்சர் யார்,
4. திருக்குறள் எளிய பொழிப்புரை
5. வள்ளுவர் கண்ட இல்லறம், அல்லது காதல் வாழ்க்கை,
6. வள்ளுவர் வகுத்த அரசியல்,
ஏ. கல்வியியல் நூல்
1. தமிழ் கற்பிக்கும் முறை
ஐ.ஆங்கில நூல்கள்
1. Origin and Growth of Tamil
2. The Making of Tamil Grammar
3. A Brief Study of Tamil Words - The Chronology of Tamil Grammarians
4. Semantemes and Morphemes in Tamil Language
5. Tamil Language - Introduction, Nagerkoil 1959
6. Tamil Language- Phonetics, Nagerkoil 1959
7. Tamil Language - Semantics, Nagerkoil 1959
8. Tamil Language - Syntax, Nagerkoil 1959
9. Tamil Language, 1961
10. Tholkoppiyam in English with critical Studies,
ஒ. கையெழுத்துச் சுவடி
1. சிவஞானசித்தியார் உரை
ஔ. பிறநூற் குறிப்புகள் மூலம் அறிய வருவன
1. குடிமைப் பயிற்சி
2. காதல்வாழ்வு
3. உண்மைத் தொண்டன் யார்?
4. நமக்கு வேண்டுவன
க. நடத்திய தமிழ் இதழ்கள்
1. சங்க இலக்கியம் - வார இதழ் (1945 - 1947)
2. இலக்கியம் - திங்கள் இருமுறை இதழ் (1947 - 1952)
3. திராவிடக் கூட்டரசு - கிழமை (வார) இதழ் (1952)
4. குறள் நெறி - திங்களிதழ் (1954 - 1955)
5. குறள் நெறி - திங்கள் இருமுறை இதழ் (1963 - 1970)
6. குறள் நெறி - நாளிதழ் 1966
நடத்திய ஆங்கில இதழ்கள்:
7. Dravidian Federation - திங்கள் இருமுறை இதழ் (1952)
8. Kuralneri - திங்கள் இருமுறை இதழ் (1963 - 1966)
ங. நடத்திய நிறுவனங்கள்:
1. பெரியார் தனிப்பயிற்சிக் கல்லூரி (தஞ்சாவூர்)
2. திருவள்ளுவர் செந்தமிழ்க் கல்லூரி
3. இலக்கியம் அச்சுக்கூடம் (விருதுநகர்)
4. குறள்நெறி அச்சகம் (மதுரை - திருப்பரங்குன்றம்)
5. தமிழ்ச்செல்வி அச்சகம் (மதுரை - திருமங்கலம்)
6. குறள்நெறி வெளியீட்டகம் (மதுரை)
7. நீலா பதிப்பகம்
ச. பெற்ற பட்டங்கள்
1. முத்தமிழ்க் காவலர் (நன்னிலம்)
2. செந்தமிழ் மாமணி
3. பயிற்சி மொழிக் காவலர் (மதுரை)
4. தமிழர் தளபதி (மதுரை)
5. தமிழ்காத்த தானைத் தலைவர் (மதுரை)
6. இலக்கணச் செம்மல் (மதுரைத் தமிழ்ச் சங்கம்)
7. தமிழ்க் காப்புத் தலைவர் (மதுரை)
ஞ. பேராசிரியரைப் பற்றிய அடைமொழிகள்
1. தமிழ் அரிமா
2. தமிழ்ப் போராளி
3. இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர்
4. இருபதாம் நூற்றாண்டுச் செந்நாப் போதார்
5. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்
6. இரண்டாம் நக்கீரர்
7. இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள்
8. பெரும் பேராசிரியர்
9. தன்மானத் தமிழ் மறவர்
10. இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி
11. செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல்
12. குறள் நெறிக் காவலர்
13. சங்கத்தமிழ் காத்த சான்றோர்
14. மொழிப்போர் மூலவர்
15. முதுபெரும் புலவர்
16. முத்தமிழ்ப் போர்வாள்
ட. ஏற்ற பொறுப்புகள் - தமிழ் அமைப்புகள்
1. தலைவர் - தமிழ்க் காப்புக் கழகம்
2. செயலர் - குறள்நெறி இயக்கம்
3. செயலர் - திருவள்ளுவர் கழகம்
4. தலைவர் - திருக்குறட் பயிற்சிக் கழகம்
5. துணைத் தலைவர் - தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை
6. செயலர் - தமிழகப் புலவர் குழு
7. செயற்குழு உறுப்பினர் - இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு
தாம் பணியாற்றிய ஊர்கள்தோறும் தோற்றுவித்த பல அமைப்புகளின் அமைப்பாளர், தலைவர், புரவலர், நெறியாளர்.
ண. ஏற்ற பொறுப்புகள் - பல்கலைக் கழகம் சார்ந்தவை
1. பாடத்திட்டக்குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழகம்
2. பாடத்திட்டக்குழு உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
3. பாடத்திட்டக்குழு உறுப்பினர், உசுமானியா பல்கலைக் கழகம், ஐதராபாத்து
4. பாடத்திட்டக்குழு உறுப்பினர், மதுரைப் பல்கலைக் கழகம்
5. பேரவை உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழகம்
6. பேரவை உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
7. பேரவை உறுப்பினர், மதுரைப் பல்கலைக் கழகம்
8. பேரவை உறுப்பினர், உசுமானியா பல்கலைக் கழகம், ஐதராபாத்து
9. ஆட்சிக் குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழகம்
10. ஆட்சிக் குழு உறுப்பினர், உசுமானியா பல்கலைக் கழகம்
சிறை வாழ்க்கை
1. இந்தி எதிர்ப்புப் போரை வழிநடத்தியமைக்காக 01.02.1965 அன்று தளையிடப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
2. மீண்டும் தமிழ் உரிமைக் காப்புப் போருக்காக 02.05.1965 அன்று இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
மறைவு